"சார், இன்னும் ஒரு பத்துநிமிஷம் காத்திருக்கலாமா?, இன்னொரு ஆதரவாளர்(ஸ்பான்சர்) வந்துகிட்டே இருக்கார். வர்றவழில அவரோட கார் பஞ்சர் ஆகிட்டதால கொஞ்சம் லேட்டாகிருச்சு, சிரமத்துக்கு மன்னிக்கனும்னு உங்ககிட்ட சொல்லசொன்னார். அவரும் இந்த வருடம் நம்ம ஆஸ்ரமத்துல இருக்கற பிள்ளைகளுக்கு இலவசமா வகுப்புகள் எடுக்கறதுக்கு உதவி செய்யறதா சொல்லியிருக்கார் " என்று அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் செயலாளர் சொல்ல "பரவால்ல, வந்ததும் விழாவை ஆரம்பிச்சிக்கலாம்" என்றார் கமிட்டியின் புதிய உறுப்பினரான கோவர்தன். காரின் சத்தம் கேட்க, வாயிலை நோக்கிச்சென்றவர்கள் அழைத்து வந்தது, மனக்கசப்பினால் நான்கு ஆண்டுகளாக பேசாமல் இருக்கும் தம்பி கிரிவர்தனை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகங்கள் கறுக்க நின்ற தருவாயில் செயலாளர் இருவரையும் பரஸ்பர அறிமுகம் செய்துவைக்க, கிரிதரன் "அண்ணா, நீ நான் என்பதை மறந்து நாம் இருவரும் கூட்டாக இந்த குழந்தைகளுக்காக ஒரு அழகான உலகத்தை உருவாக்குவோமா?" என கேட்க, வேற்றுமை மறந்து "கண்டிப்பாக கிரிதரா" என்றார் கோவர்தன்.
Monday, March 2, 2020
Subscribe to:
Posts (Atom)
Learning Beyond Textbooks - Life Skills - Child Growth
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
It was bedtime for Aarav. Vinay took out a book for their reading routine. The story was about how two men made their plan to steal a farm...
-
It’s my favorite day today, my birthday. When a special person is around you, you would love that day, right? For the whole week, I woke up...
-
எனக்காக உருகும் இதயம் எந்நேரமும் சாய்ந்திட இடம் கொடுக்கும் தோள்கள் குழந்தையாய் மாறி உறங்கிட மடிதனிலே கிடைத்திடும் இடம் விழிகளை தாண்டும்...