"இந்த வயசில் உனக்கு இது போன்ற எண்ணங்கள் வருவதில் தவறில்லை அனு, ஆனா இன்னும் 6 மாசத்துல போர்டு எஃசாம் வருது", தலைகுனிந்து உட்கார்ந்திருந்த மகளின் தலையை வருடியபடி அம்மா சொன்னாள். "மகிழ்ச்சி, துக்கம் போல காதலும் ஒரு உணர்வு தான். நம்மளோட சந்தோஷத்துக்காகவும் துக்கத்துக்காகவும் படிப்பை கோட்டை விடமாட்டோம் இல்லையா? அதே மாதிரி தான், இந்த உணர்வையும் கடந்து போக ட்ரை பண்ணு. இந்த வயசுல படிப்பைத்தவிர வேற எதுவும் அவ்ளோ இம்பார்ட்டண்ட் கிடையாது. முப்பது வருடத்திற்கு முன் அம்மா சொன்ன அன்புமொழி இன்றும் பசுமையாய் நிறைந்திருந்தது அனுவின் நினைவில். அதை அவள் தீர்க்கமாகவும் நிதானமாகவும் சொன்ன விதம், அவளின் மொழிக்குத்தான் எத்தனை சக்தி? அது தானே அவளுக்கு தூண்டுகோலாயிருந்தது. என் மகளுக்கும் இந்த வார்த்தைகள் தேவைப்படலாம், அப்போது நானும் உன்னை போலவே நிதானமாகவும் தெளிவாகவும் கண்டிப்பாக இருப்பேன் அம்மா, அனு மனதில் நினைத்து கொண்டாள்!
No comments:
Post a Comment