இருள் போர்த்திய இரவு நேரம்,
ஜன்னலோர பயணம்,
வருடிய குளிர் காற்றில் நிலா மகள் இளைப்பாற சென்று விட்டாளோ!!
பஞ்சு பொதி மேகக்கூட்டங்கள்,
மினுக் மினுக் என கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்,
சொல் பேச்சு கேளா பிள்ளை போல எதிர்திசையில் ஓடும் மௌன காட்சிகள்,
காதில் ரம்மியமாக ரசனையான ராஜாவின் இசைச் சாரல்;
ஆர்ப்பாட்டமில்லாத இரவு உலகின் அழகில் லயிக்க மெய்மறக்க,
வேறென்ன வேறென்ன வேண்டும்!!
No comments:
Post a Comment