Thursday, June 27, 2019

How Our Apartment In Chennai Survived The Acute Water Crisis

 Note : These are just from our experiences and an awareness post which might help many individual houses or apartments to use their water wisely and reduce manual effort. By following these we were able to reduce our electricity bills by 50%. We are not promoting any brands here. More technical details, product information and cost details can be acquired through the search engines.

 In the recent days our social media is getting flooded with messages on how to effectively save water or consume minimal water for different chores and how to store rain water.  Here’s what we did in our apartment in Vandalur and we have been surviving during this critical period without depending on the water tankers.

Our Experience

The summer of 2014 was like a nightmare for us. Ours is a 3 block apartment, with individual borewells and overhead tanks. The block in which we own a flat had a very poor yield, but the other two blocks had surplus. Back then we did not have a security guard. So, running the motor was taken care by just ourselves. Unfortunately, in our block the family who had been taking care of the motor had shifted to a new place and there started the problem. Initially we didn’t know that we should not run the motor for a long time. Whenever we don’t get water any flat member would just go down and turn on the motor and it would run for an hour or two continuously, ending up dry running and with high electricity charges as well. One fine day our motor coil got damaged and only then we came to know from the plumber that a motor can run only for 30-45 minutes at a stretch.

Hence I took up the responsibility of taking care of the motor timings. Never knew it would be such a difficult task. Our yield was so very little that our motor could pump only for 15 minutes. Then I had to leave a gap of 45 minutes and then turn on the motor. By the time I turn off and go back home, some resident would have turned it on as the water had already stopped. Inspite of explaining them that dry running a motor will give us more troubles, it’s the human tendency to expect the machine to work irrespective of whatever the scenario is.

There were days when I had been climbing up and down more than 20 times a day along with my little one and even to the terrace to check the water level in the overhead tank.  Sometimes I used to take care of this motor activity during nights, when there is minimal usage, so that we have some safe water levels for the next day. But nothing helped us. And this task was already testing my patience.

All that we could understand was we have a very minimal yield and had to plan wisely so that we get water without any interruption. We were badly in need of a PERMANENT solution and that’s when the talk about the Automatic Controllers came in through a known friend of my hubby. We already had a little knowledge about controllers as my dad has the set up for our individual house in my native. But for an apartment setup, we had to do dig in for more details and understand it end to end from the vendor. Since it was very new to us, we first thought of installing the controller for just one block and go with it gradually. When we got it installed it was like a whole lot of relief for us. From then on, there wasn’t any manual effort to turn on and off the motor. And our pockets were saved as the electricity bill was also reduced. So, we installed automatic controllers for the remaining two blocks as well.

So, here comes the detailed info:

A float will be installed in the overhead tank, which monitors the minimum level (tank doesn’t go empty) and maximum level (water doesn’t overflow).

Next is the controller, in which two timers are set. First is the motor running time, that is, for how long a motor should run. Say for example, if it is set to 30 minutes, the motor will automatically be turned off in 30 minutes. Second is the time interval, that is once the motor turns off, after how many hours or minutes, should it be turned on again. Consider it to be set as 60 minutes.

When will the motor be turned on?

Motor will be turned on under two scenarios. Either when the water level reaches the minimum level or after 60 minutes (whatever is set as time interval) from when the motor was last turned off.

When will the motor be turned off?

When the water level reaches the maximum level or when the running time reaches 30 minutes or when there is a dry run(when the motor doesn’t pump any water) or when the motor is overloaded.

 These are the Benefits

  • No dry running/overload (saves your motor coil, electricity bill)
  • No overflowing (saves water and electricity bill again)
  • No scenarios of tank getting emptied unless other wise the controller itself turns faulty. Which means we have water supply at all times.
  • Most importantly reduced manual effort, which means we don’t forget to turn on/off the motor on time
  • Optimal usage of motor, saves motor life

Now that all the manual efforts were reduced for all blocks, we noticed a considerable reduction in the units consumed.  Since naturally we had yield problem with our block, unit consumption was higher than the other two blocks. Which means the motor had to run a little longer than the other two blocks. After all, we were just one single apartment as a whole. So, we thought why not share the resources across blocks. Many brainstorming sessions happened with numerous plumbers to understand how to overcome the scenario. And then we came up with the idea if interlinking the overhead tanks.

Concept:

A connection was established across all the three overhead tanks’ outlet line. (interlined the 3 tanks). So, at any point of time a motor pumps water to a tank, this water will be shared across with the other two tanks.

Where this helped?

  • Since our block had a minimal yield, water sharing from the other two blocks saved our block motors’ unit consumption.
  • If any motor of a particular block doesn’t work for some reason, residents don’t have to worry. Other two motors will pump their water and the water will be eventually shared through the connected lines. (recently happened and none of the residents suffered without water)

Any new initiative would have its own set of challenges. In our case, not everyone was convinced with the interlinking as it was new to everyone. But we kept insisting and convinced them as the benefits were going to be for the entire apartment in a longer run. Again, most importantly it is our duty to save the natural resources in all possible ways and we have to do our part. Isn’t it?


Tuesday, June 25, 2019

கல்வியினால் ஆன பயன்!!

 ஆனி மாத வெய்யில் கத்தரியை போல சுட்டெரித்துக்கொண்டிருந்தது.  "ஸ்ஸ், வெய்யில் என்னமா மண்டைய பொளக்குது" என்றபடியே புல்லெட்டை வீட்டின் முன் நிறுத்திவிட்டு காலை கழுவி விட்டு உள்ளே வந்தான் சேகர். மூன்றாவது படிக்கும் கோகுல் இங்கிலிஷ் ரீடிங்கில் ரொம்ப வீக்கா இருக்கான். வீட்டிலும் நீங்கள் கொஞ்சம் வாசிக்க சொல்லுங்க என்று அவன் கிளாஸ் டீச்சர் சொல்லி இருந்ததால் அப்போது தான் அவனை படிக்க வைக்க அவனுடன் மதுமலர் உட்கார்ந்தாள். கணவன் வரவும், வந்தவனுக்கு சில்லென்று மோரை கொடுத்தபடியே "கழனில களை எடுக்க வேலை ஆள் வர சொல்லி இருந்தீங்களே வந்துட்டாங்களா? டீ போடணும், எத்தனை பேருக்குனு தெரிஞ்சா அதுக்கேத்தமாதிரி போடுவேன்" என்று கேட்டாள். "அப்படியே உங்க கிட்ட இன்னோன்னு கூட கேக்கணும்" என்று தயங்கினவளை "ம்ம் என்ன" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான். "TRBExamக்கு  ஆன்லைன்ல அப்பிளிகேஷன் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். நானும் இந்த வருஷம் அப்ளை பண்ணட்டுமா? கிளீயர் பண்ணி வச்சிக்கிட்டா எப்ப வேணும்னாலும் யூஸ் ஆகும்ல" என்றவளை "அப்படியே மகாராணி எழுதி பாஸ் ஆகிட்டாலும், அதெல்லாம் ஒன்னும் வேணாம். போயி டீயை போடு போ. வயல்லேர்ந்து ஆள் வந்துடுவாங்க. அங்க ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. வெட்டி பேச்சு பேசி நேரத்தை வீணாக்காத" என்று சிடு சிடுத்தான்.   

மதுமலருக்கு இது கல்யாணம் ஆன நாளிலிருந்து பழகிப்போன ஒன்று. M.ed முடித்துவிட்டு ஒரு பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது "ஒரு நல்ல இடம் வந்திருக்கும்மா, பாத்துரலாமா?" என்று அவள் அப்பா அவளிடம் கேட்ட போது குடும்பத்தின் சூழ்நிலை புரிந்து "உங்க விருப்பம்பா" என்று ஒற்றை வார்த்தையில் பணிந்து போனாள். திருமணத்திற்கு பிறகு நிலைமையே மாறி போனது. கணவனும், மாமியாரும் அவளை அவ்வப்போது மட்டம் தட்டி கொண்டே இருப்பார்கள். மதுமலர் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே போய் விடுவாள். இரண்டு பிள்ளைகள், அவர்கள் படிப்பு, வீடு, சமையல்கட்டு என்று தன் உலகம் மிகவும் சுருங்கி போனது அவளுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. அதை மீண்டும் உயிர்த்தெடுக்க அவள் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. அன்றும் அப்படி தான் ஆகிபோனது. 

அவள் சமயலறைக்குள் புகுந்த அடுத்த நொடி விட்டால் போதும் என்பது போல கோகுல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "அப்பா, கிரிக்கெட் ஆடலாமா?  நா பால் போடறேன். நீங்க தான் பேட்டிங். அடிக்கற பால் நேரா போயி அம்மா போடற டீ சட்டிக்குள்ள விழணும். சரியா?" என்று அவன் பங்குக்கு அந்த பொடிப்பயலும் அவள் பொறுமையை சோதித்தான்.  கோகுலும் இப்போதெல்லாம் முன் போல அவள் பேச்சை கேட்பதில்லை. பிள்ளைகள் யாரை பார்க்கிறார்களோ அது போல தானே வளர்வார்கள். பிற்காலத்தில் வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் கூட அப்படி தானே பேசுவான். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்துக்கொள்வாள்.

அன்று மாலை இரவு உணவு தயாரிக்க மலர் சமயலறையில் இருந்த சமயம், கோகுல் அவன் அப்பாவுடன் சேர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்தான்.  அப்போது ஏழாவது படிக்கும் அவர்களது மகள் செல்வி "அப்பா, எங்க ஸ்கூல்ல 'கல்வியினால் ஆன பயன்' அப்படீங்கர தலைப்புல ஒரு கட்டுரை எழுதிட்டு வர சொன்னாங்க. அதுக்கான கருத்தை யோசிச்சு வைச்சிருக்கேன். சொல்லட்டுமா, கேட்டு அது சரியா இருக்கா இல்ல இன்னும் ஏதாது சேர்க்கணுமான்னு சொல்றீங்களா" என்றபடியே தான் யோசித்து வைத்திருந்த பாய்ண்ட்ஸை சொல்ல ஆரம்பித்தாள்.

"கல்வி என்பது நாம் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே என்று இல்லாமல், அதை கற்றவருக்கும் அவரை சுற்றி இருப்பவருக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த கல்வி என்பது ஒருவருக்கு நற்பண்புகளையும், நல்ல குணங்களையும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருக்கும் தன்மையையும் கொடுக்கும்" என்று தான் யோசித்து வைத்திருந்த மேலும் சிலகருத்துகளையும் சொல்லி முடித்தாள். "ரொம்ப அருமையா இருக்குடா. நீயேவா எழுதின?"  என்று பெருமையாக கேட்டான் சேகர். "ஆமாம்பா, அம்மாவை மனசுல வச்சு தான் இதை எழுதினேன். அம்மா எனக்கும், தம்பிக்கும் பாடத்தை எவ்ளோ பொறுமையா சொல்லி கொடுக்கறாங்க. ஏதாவது கான்செப்ட் புரியலேனா, எங்களுக்கு புரியற மாதிரி எக்ஸாம்பிள்ஸ் சொல்லி எவ்ளோ டைம் ஆனாலும் நிதானமா சொல்லி கொடுக்கறாங்க. அத வச்சு நா என்னோட பிரெண்ட்ஸ்க்கு  கூட ஸ்கூல்ல சொல்லி குடுத்துருக்கேன். நெறய தடவ கிளாஸ்ல மிஸ் 'ஏ என்ன முன்னாடி வந்து எல்லாருக்கும் எக்ஸ்பிளைன் பண்ண சொல்லி இருக்காங்க. அதுக்கெல்லாம் அவங்களோட நாலெட்ஜ் தான காரணம். அவ்ளோ ஏன்?  நானோ தம்பியோ ஏதாவது தப்பு பண்ணா கூட அதை பக்குவமா எங்களுக்கு புரிய வைக்கறாங்க. ஸ்கூல்ல என்  பிரெண்ட்ஸ்லாம் எவ்ளோ கத சொல்லுவாங்க தெரியுமா, அவங்க அம்மா அடிச்சாங்க, திட்டுனாங்க அப்படி இப்படினு. எங்களுக்கு பிரெண்ட்லியான ஒரு அம்மா கெடச்சதுக்கு நாங்க ரொம்ப லக்கிப்பா. அது மட்டுமில்லாம அவங்களுக்கு வீட்ல எவ்ளோ வேலை இருந்தாலும் அவங்க முகம் சுழிச்சு ஒரு நாள் கூட நா பாத்தது இல்லை. எனக்கும் கூட வளர்ந்து பெரியவளான பிறகு அம்மா மாதிரி ஒரு டீச்சர் ஆகணும்னு தான் ஆசை. என்னால முடிஞ்ச வரைக்கும் நானும் எல்லா பிள்ளைகளுக்கும் சொல்லிகுடுக்கணும்.  அதான் ஸ்கூல்ல இந்த டாபிக் குடுத்த உடனே எனக்கு அம்மா தான் மனசுல வந்தாங்க. நா சொன்ன  பாய்ண்ட்ஸ் எல்லாம் சரி தானப்பா" என மகள் கேட்ட போது தான் சேகருக்கு எதுவோ புரிந்தது. "ரொம்பவே சரி தான் டா" என்ற சேகரின் பதில் மதுமலருக்கே பெரிய ஆச்சரியம் தான்.  அறிவே ஆற்றல் (knowledge is  power) என்பதில் ஐயமே இல்லை!!

Friday, June 14, 2019

தன் கையே தனக்குதவி!!

 ஒட்டிக்கொண்டிருந்த கண்ணிமைகளை கஷ்டப்பட்டு பிரித்து, கண்ணிடுக்கு வழியே மொபைலை எடுத்து சாரு மணி பார்த்தாள். மொபைல் திரை 10:40 என மணி காட்ட, பதறியடித்து கொண்டு எழுந்து ஹாலுக்கு வந்தாள். தோசை கல்லில் மாவை ஊற்றும் ஸ்ஸ்ஸ் சத்தமும், நெய்யின் நறுமணமும் அவளது பசியைத் தூண்டியது. நேராக கிச்சனுக்கு சென்றவளை கண்டதும் "குட் மார்னிங் மா, நல்லா தூங்கினீங்களா?" என்று விச்சு அக்கறையுடன் கேட்க, "நல்லா தூங்கினேன் போ, இன்னைக்கு பாட்டி ஊர்லேர்ந்து வராங்கனு தெரியும்ல, என்னை கொஞ்சம் சீக்கிரமா எழுப்பி இருக்க கூடாதா? நைட் ப்ராஜெக்ட்ல ஒரு இஷ்யு, அப்படி இப்படினு முடிஞ்சு நா வீட்டுக்கு வந்து படுக்கறதுக்கே 4 மணி ஆகிருச்சு. இனிமே போயி நா குளிச்சு, ரெடியாகிட்டு வந்து சமைச்சு முடிக்கணும். அப்பா ஸ்டேஷன்க்கு போயாச்சா? சாப்பிட்டாரா? என்ன சாப்பிட்டாரு?" என கேள்வி மேல் கேள்வி கேட்டவளை பார்த்து விச்சு சிரிக்க, "உனக்கு சிரிப்பா தான் இருக்கும்" என்று முறைத்த படியே பாத்ரூமிற்குள் புகுந்தாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் குளித்து ரெடி ஆகி வந்து நின்ற அம்மாவிற்கு தட்டில் சூடாக தோசையும், சட்னியும் பறிமாறியபடியே "டோன்ட் ஒர்ரி மா, இன்னைக்கு சமையலை நா பாத்துக்கறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க. மெனு கூட பிளான் பண்ணியாச்சு" என விச்சு சொல்ல "என்ன விளையாடறியா? உங்க பாட்டிய பத்தி தெரியும்ல, சாப்பாடு சுவை கொஞ்சம் மாறினாலும் வாயில வைக்க மாட்டாங்க. அதுனால ஒழுங்கா கிச்சனை விட்டு வெளில போ, நா பாத்துக்கறேன்" என தோசையை வேகமாக விழுங்கி விட்டு அவசரமாக எந்திரிக்க போனவளை மொபைல் சிணுங்கி சிணுங்கி அழைத்தது. "எப்படியும் உங்க ஆபீஸ்ல இன்னைக்கு உங்கள விட மாட்டாங்க, மதியம் எல்லாருக்கும் போஜனம் என் கையால் தான்" என கிண்டலாக சொன்ன விச்சுவை தர்மசங்கடத்துடன் பார்த்தபடியே போன் பேச ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் முழுக்க சாரு போனிலும், மணக்கும் தக்காளி குழம்பு, முருங்கைகாய் கூட்டு, பெருங்காயம் மணக்க மணக்க ரசம், அப்பளம் என விச்சு கிச்சனிலும் பிசியாக இருந்தனர். இருவரும் அவரவர் வேலையை முடித்த தருணத்தில் வாசலில் கார் சத்தம் கேட்க, ஊரிலிருந்த வந்த அத்தையை வரவேற்க சாரு வேகமாக வாசலுக்கு ஓடினாள். சாருவிற்கு எப்பவுமே அவளது மாமியார் மீது மிகுந்த மரியாதை உண்டு, இவர்கள் அனைவர் மீதும் அலாதி பிரியம் கொண்டவர், அதே சமயம் கண்டிப்பும் உடையவர். சாருவும் அவர் மணம் கோணாதவாறு நடந்து கொள்வாள். இன்று தான் என்ன ஆக போகிறதோ என கொஞ்சம் பயந்து கொண்டே இருந்தாள்.

"பாட்டி இப்படி பேசிக்கொண்டே இருந்தால் எப்ப சாப்பிடுவதாம்? எனக்கு ரொம்ப பசிக்குது" என அம்மாவை பார்த்து கண்ணடித்து கொண்டே விச்சு சொல்ல. "எடுத்து வைம்மா சாரு எனக்கும் கூட பசிக்குது" என்றவரிடம் "எல்லாம் ரெடியா இருக்கு அத்தை, வாங்க சாப்பிடலாம்" என்றாள் சாரு. "இதென்ன முருகைக்காயில் கூட்டா, புதுசா இருக்கே" என்றவரிடம், "பாட்டி இது எங்க ஆபீஸ் கான்டீன்ல செய்வாங்க. ரொம்ப சூப்பரா இருக்கும். இன்னைக்கு தான் முதல் தடவையா ட்ரை பண்ணேன். சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க" என்று சொன்ன நிமிடம் பாட்டியின் முகம் மாறியது. "என்ன நீ சமச்சியா? ஏன் சாருவுக்கு என்னாச்சு?" என கொஞ்சம் கடுமையான தொனியில் கேட்க "பாட்டி, பாட்டி நேத்து நைட் அம்மாவுக்கு ஆபீஸ்ல நெறைய வேலை, விடியற்காலைல தான் வீட்டுக்கே  வந்தாங்க. அதான் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டுமேனு நா இன்னைக்கு சமைச்சேன்" என விச்சு சொல்லி முடிக்குமுன் "அதுக்குன்னு ஒரு ஆம்பளபுள்ளய சமைக்க விட்டுட்டு உங்கம்மா தூங்கிட்டு இருந்தாளா? அநியாயமால இருக்கு" என்று கோவமாக சாரு பக்கம் திரும்புவதற்குள் "அதுனால என்ன பாட்டி, பெங்களூருல டெய்லி நானே தான எனக்கு சமைச்சிக்கறேன், இன்னைக்கு நம்ம வீட்ல எல்லாருக்காகவும் செஞ்சது எவ்வளவு ஹாப்பியா இருந்துச்சு தெரியுமா" என்றான் விச்சு என்கிற விஸ்வநாதன்.  

"ஏன் உங்க ஆபீஸ்ல தான் கான்டீன் இருக்குமே, நீ ஏன் அங்க சாப்பிடாம வீட்ல நீயே... அட ராமா.. நானெல்லாம் உங்க தாத்தாவை கிச்சனுக்குள்ள விட்டுருப்பேனா, ஒரு வேலை தான் செய்ய விட்டுருப்பேனா? இங்கேன்னாடானா, ஏண்டா ராமு இதெல்லாம் நீ ஏன்னு கேக்க மாட்டியா?" என்று தன் மகனை கடிந்துகொண்டவரை, "அது அப்படி இல்லை பாட்டி, டெய்லி மூணு வேளையும் வெளில சாப்பிட்டா என் நாக்கு செத்து போகுது. அதுல இருக்க எண்ணையும் காரமும் வயிர ரணமாக்கிருது. அம்மா எனக்கு சமையல் சொல்லி குடுத்ததால தான் என்னால அங்க வயிறார சாப்பிட முடியுது. வீக்கென்ட் ஆனா என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட எங்க வீட்டுக்கு வந்துருவாங்க என் சமையலுக்காக, தெரியுமா. அவனவன் அவ்ளோ காஞ்சு கெடக்கரான் நல்ல சாப்பாடு சாப்பிட. சமையல் மட்டுமில்லை, என்னோட வேலைகள் எல்லாமே செய்யறதுக்கு அம்மா சின்ன வயசுல இருந்தே எனக்கு சொல்லி கொடுத்துட்டாங்க. அது எனக்கு எவ்ளோ உபயோகமா இருக்கு தெரியுமா. இன்னும் ரெண்டு மாசத்துல நா ஒரு ஆன்சைட் ட்ரிப் போக வேண்டியிருக்கும். அப்பல்லாம் நானும் சரி, அப்பா அம்மாவும் சரி எதை பத்தியும் கவலை பட வேண்டியதில்லை. என்னையும் என் வேலைகளையும் நானே பாத்துக்குவேன்" என நிதானமாக சொன்ன பேரனிடம் "நீ என்ன தான் சொல்லு, ஒரு ஆம்பளபிள்ளையை வீட்டு வேலையெல்லாம் செய்ய விடறதை என்னால ஜீரணிசிக்கவே முடியல" என்றார். "அட என்ன பாட்டி நீங்க, தாத்தாவே எத்தனை தடவ வேலை விஷயமா வெளி ஊருக்கு போனா சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கார், அவர் கொண்டு போன துணிமணியை கூட பத்திரமா சில நேரம் கொண்டு வர மாட்டாருனு நீங்க சொல்லும்போது நா கேட்டுருக்கேன். அவ்வளவு ஏன், சின்ன வயசுல நீங்க சொன்ன ஒரு கதை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. ஒருவனுக்கு ஒரு வேளை சோறு போடுவதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுதும் அவனுக்கு அது உபயோகப்படும் என்று நீங்க தானே பாட்டி அன்னிக்கு சொல்லி குடுத்தீங்க. அப்ப அம்மா செஞ்சது சரி தான" என்று மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் பேரனிடம் "உன்னை நான் பேசி சமாளிக்க முடியாது. என்னவோ போ, எல்லாரும் நல்லா இருந்தா சரி. ஆனாலும்..." என்று ஆரம்பித்தவரை "ஐயோ, பாட்டி மறுபடியுமா" என்று விச்சு கேட்க "அட, ஆனாலும் முருங்கைக்காய் கூட்டு நல்லா தான் இருக்குனு சொல்ல வந்தேன் டா" என்று சிரித்துகொண்டே பாட்டி சொன்னார்.      

Thursday, June 13, 2019

ஒன் ஸ்டாப் ஷாப்!!

 "அப்பாடா! இன்று வேலையெல்லாம் ஒரு வழியா சீக்கிரமா முடிஞ்சிருச்சு" என்று நினைத்தவாறே கிச்சனை விட்டு வெளியில் வரும்போது கண்ணில் பட்டது நியூஸ்பேப்பரில் பழுப்பதற்கு என்று சுற்றி வைத்திருந்த அந்த பப்பாளி பழம். அதானே பாத்தேன், அதெப்படி அதுக்குள்ள வேல முடியறது என்ற சின்ன சலிப்புடன் பழத்தை கழுவி, தோல் சீவி, அதன் குறுக்காக கத்தியை சொருகி இரண்டாக வெட்டினேன். என் கண்களை என்னாலேயே  நம்ப முடியவில்லை. உள்ளே ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய நிறைய விதைகள். இப்ப வாங்கற பப்பாளியில் எல்லாம் எங்க விதை இருக்கு? நானும் ஒவ்வொரு தடவையும் கடைகாரர்கிட்ட கேட்பேன், இதில் விதை இருக்குமான்னு, அவரும் கண்டிப்பா இருக்கும்மா அப்படீம்பார். ஆனால் அத்தி பூத்தார் போல எப்பவாச்சும் ஒன்னு இல்ல ரெண்டு விதை இருக்குமே தவிர இன்று போல இருந்ததில்லை. நாமளும் இப்பலாம் சீட்லெஸ் பழங்களை தான் விரும்பறோம்.

எப்பவும் போல் இல்லாமல் இந்த முறை வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கடையில் தான் அந்த பப்பாளியை வாங்கினேன். பொதுவாகவே பெரிய பெரிய கடைகளில் பளபளப்பாக இருக்கும் காய்கறிகள் பழங்கள் வாங்குவதில் எனக்கு அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. ஓரளவு சிறிய கடைகளில் தான் பார்த்து பார்த்து வாங்குவேன். எங்கள் அபார்ட்மெண்ட் இருப்பது ஒரு கிராமத்திற்கு நடுவில் தான் என்பதால் எப்பவும் சிறு வியாபாரிகள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்களை கூறு வைத்து விற்பது வழக்கம். அதே போல தேங்காய், எலுமிச்சை, முருங்கைக்காய் போன்றவற்றை அபார்ட்மென்டுக்கே எடுத்து கொண்டும் வருவார்கள். நாலு எலுமிச்சை பத்து ரூவாய், ஐந்து முருங்கை பத்து ரூவாய் என மலிவாகவும் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருந்த முருங்கைக்காயை வாங்கினேன். அதிலிருந்த அந்த சதைப்பத்தும், சுவையும் காய்கறி கடையில் வாங்கும் போது இருந்ததில்லை. அதிலிருந்து எப்பவெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இது போன்ற சிறு வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக வாங்க ஆரம்பித்து விட்டேன்.  ஓரளவுக்கேனும் பிரெஷான காய்களை சாப்பிடுகிறோமே என்ற திருப்தி. 

சொத்தையான கத்தரி, புழு இருக்கும் வெண்டை, இதெல்லாம் ஒரு காலத்தில் பார்த்தால் என்ன காயெல்லாம் புழுவா இருக்கு என முகம் சுழித்து இருக்கிறேன். அதிலும் பள்ளி பருவத்தில் அம்மா செய்யும் காலிஃளாரில் எனக்கு என்று தேடி பிடித்து வரும் புழுவினாலேயே பல வருடங்கள் காலிஃளார் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.  பூச்சி மருந்துகளின் நச்சு தன்மை பற்றி சில வருடங்கள் வரை அவ்வளவாக தெரிந்ததில்லை, அப்போதெல்லாம் காய்கறிகளில் புழு இல்லையே என்று மனம் திருப்தி பட்டுக்கொள்ளும். அதை பற்றி தெரிந்த பிறகு பார்க்கும் சொத்தை கத்தரியும், புழுவிருக்கும் வெண்டையும் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலை தருகிறது என்பதை மறுக்கவே முடியாது.

சிறு பிள்ளையாக இருக்கும் போது கறிகாய் வாங்க என் அம்மாவுடன் கடைக்கு செல்லும் போது ஒவ்வொரு காயாக முத்தலில்லாமல், சொத்தையிலாமல் பொறுக்கி வாங்குவதற்கு அவ்வளவு நேரம் ஆகும். அதுவும் ஒரே கடையில் வாங்கி விட முடியாது, நாலு கடை பார்த்து தான் வாங்குவார்கள். அந்த பொறுமை இன்று நமக்கு மிகவும் குறைந்து விட்டது. ஒரு ஒன் ஸ்டாப் ஷாப்க்கு போனோமா, ட்ராலியை எடுத்தோமா, காய்கள், பழங்கள், மளிகை சாமான்கள், உடைகள் என மட மடன்னு எல்லாத்தையும் எடுத்து போட்டோமா, பில்லை கட்டினோமானு கெளம்பி வந்துகிட்டே இருக்கணும்ங்கறது தான் இப்ப நம்மளோட லைப் ஸ்டைல். இருந்தாலும் நெறய பேருக்கு இந்த லைப் ஸ்டைலோட விளைவுகள் என்னனு புரிய ஆரம்பிச்சிருச்சு. முடிந்த வரையில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்திக்கறோம். சிறிய அளவிலான முயற்சியாக இருந்தால் கூட "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" தானே?

Sunday, June 9, 2019

சிபாரிசு!

 "அட, ஏன் தான் இந்த மெஸ்ஸில் இப்படி ஒரு சாப்பாடு போடுகிறார்களோ", என துளசி தன் மனதிற்குள்ளயே நினைத்து கொண்டாள்.  சுடச்சுட சாதம், நெய், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், மோர் என வகையாக, அதுவும் அவ்வளவு ருசியாக இருந்தால் யாராயிருந்தாலும் எக்ஸ்ட்ரா ரெண்டு கவளம் உள்ளே போகதானே செய்யும். அப்புறம் எப்படி கிளாசில் உட்கார்ந்து பாடத்தை கவனிக்கறதாம்?

மதிய வேளை முதல் பீரியட், முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் அந்த பாஸ்கல் (அது ஒரு சப்ஜெக்ட்) கிளாசில் துளசி உட்பட நாற்பது மாணவிகளும்  உண்ட மயக்கத்தில் டீச்சர் என்ன நடத்துகிறார் என்பதே புரியாமல் மண்டையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தார்கள். "ஐ ஹோப் எவெரிஒன் அண்டர்ஸ்டூட்,  நவ் லெட் மீ அஸ்க் யு குவெஸ்டின்ஸ்" என பார்வையை சுழல விட்டபடி அந்த டீச்சர் ஆட்காட்டி விரலை உயர்த்தி "யு கெட் அப்" என துளசியை பார்த்து கூறினாள்.  ஐயோ, இவ்ளோ பேர் இருக்கும் இந்த கிளாசில் இவர்கள் கண்ணுக்கு நான் மட்டும் தான் பட வேண்டுமா, கடவுளே!!

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி இருந்தபோதும், துளசிக்கு அது தான் இரண்டாவது நாள். பிளஸ் டூவில் எண்பத்தைந்து சதவீதம் வாங்கி இருந்தாலும் சைகாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிக்க போவதாகவும், ஹாஸ்டலில் தங்கி தான் படிக்க வேண்டும் என்றும்   பெற்றோரிடம் பெர்மிஷன் வாங்கி இருந்தாள். சென்னையில் WCC'ல் அப்ளை பண்ணியிருந்த  சைகாலஜி  சீட் கடைசி நிமிஷத்தில் காலை வாரி விட, "பக்கத்தில் இருக்கும் காலேஜ் எதிலாவது சேர்த்துக்கோயேன்" என சொன்ன அவளது பெற்றோரிடம் திருச்சியில் ஏதாவது காலெஜ்ல் அப்ளை பண்ணலாம் என கெஞ்சி அவர்களிடம் சம்மதம் வாங்குவதற்குள் அந்த காலேஜிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்கு அட்மிஷன் முடிந்து விட்டது என்று சொல்லி விட்டார்கள். பின்பு அவளது அப்பா தான் தெரிந்தவர்கள் மூலமாக ட்ரை பண்ணி ரெகமெண்டஷனில்  சீட் வாங்கி கொடுத்தார். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன் என ஜம்பமாக சொல்லிவிட்டாலும் முதலில் வீட்டையும், பெற்றோரையும் மிகவும் மிஸ் பண்ணினாள். கிளாஸ்சிலும் யாரும் அவ்வளவு பரிச்சயம் ஆகவில்லை. அப்படி இருக்கையில் தான் "இன்று டீச்சரிடம் நன்றாக வசை வாங்க போகிறோம் என கீழ் உதடை கடித்தபடி என்ன கேள்வி கேட்க போகிறாரோ" என்று தயங்கிய வண்ணம் எழுந்து நின்றாள்.

கேட்ட கேள்விக்கு தத்து பித்து என உளறுகிறோம் என்று தெரிந்தே ஏதோ உளறி வைத்தாள். "யு ஆர் தி ஒன், ரைட்? ஹூ கேம் பார் அட்மிஷன் லாஸ்ட் வீக்?" என்று அவர் கேட்ட தொனி,  ரெகமெண்டஷனில்  வந்ததெல்லாம் இப்படி தானே இருக்கும் என்பது போல இருந்தது. "காலேஜ் வந்து விட்டோம் என்று லதார்ஜிகா இருந்தீங்கனா லாஸ் உங்களுக்கு தான், சிட் டவுன்" என்றவர் அடுத்த டாபிக்கை  நடத்த ஆரம்பித்து விட்டார். துளசிக்கு மிகுந்த அவமானமாகி விட்டது. அம்மாவிடம் உடனே சொல்லி அழ வேண்டும் போல் ஆகி விட்டது. அன்று முழுவதும் அவள் யாரிடமும் சரியாக பேசவில்லை.

அடுத்த நாள் காலை முதல் பீரியட்டே பாஸ்கல் மேமோடது தான் என்று டைம் டேபிள் சொல்ல, வயிற்றுக்குள் ஒரு மிக்ஸியே ஓடியது. ஊரில் உள்ள எல்லா கடவுளையும் துணைக்கு கூப்பிட்ட படி பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அன்று வந்ததும் வராததுமாக "குட் மார்னிங் எவெரிபடி,  லேட்ஸ் சி ஹொவ் மச் யு ஆல் ஹவ் ஸ்கோர்ட் இன் யுவர் பிளஸ் டூ" என்றபடி "90  பெர்ஸண்டெஜ் அண்ட் அபவ்" என்று சொல்ல யாருமே எழுந்திரிக்கவில்லை, "85 அண்ட் அபவ்" என்று கூற துளசியும் இன்னொரு மாணவியும் எழுந்தார்கள். துளசி எழுந்ததை பார்த்த டீச்சர் கண்ணில் சிறிதாய் ஒரு ஆச்சரியம் வந்து போனதை அவள் கவனிக்க தவறவில்லை. "வெரி குட், சிட் டவுன்" என்றவரை பார்த்து  "தாங் யு, மேம்" என்று சிறு புன்னகையுடன் கூறினாள். டீச்சரும் அவளை பார்த்து முறுவலித்த போது துளசி ஆல்ரெடி வானத்தில் பறந்து கொண்டிருந்தாள், கற்பனையில்!!! 

Learning Beyond Textbooks - Life Skills - Child Growth

#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...