பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தாள் பொதுத்ததேர்வின் முந்தைய நாள்,
தியேட்டர் சென்று காதல் கோட்டை படம் பார்த்த நான்..
கல்லூரியின் செமஸ்டர் தேர்வின் போது, தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய,
பிளாக் அண்ட் ஒயிட் படத்தை கூட மிஸ் பண்ணாமல் பார்த்த நான்..
எக்ஸாமின் போது எந்த டென்ஷனும் இல்லாமல், கூலாக, ஹாயாக
பேப்பர் படித்துக்கொண்டும், அரட்டையடித்துக்கொண்டும் இருந்த நான்..
இன்று
"சண்டே வீட்டுக்கு வர்றியா?" என்ற அக்காவிடம்,
"வீக்கெண்ட் ஃபிரீயா, மீட் பண்ணலாமா?" என்ற நண்பரிடம்,
"அப்படியே ஒரு டிரைவ் போலாமா?" என்ற கணவரிடம்,
"எங்கடி, ஒரு வாரமா ஃபோனே காணோம்", என்ற அம்மாவிடம்,
"ஈவினிங் கொஞ்ச நேரம் வாக்கிங் போலாமா?" என்ற தோழியிடம்,
சொன்னேன்,
"சாரி, ஐ ஆம் நாட் அவைலபில்"
மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனின் பரீட்சைக்காக!!
No comments:
Post a Comment