இந்த கதையை கதைகேட்கலாம் பகுதியில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு ஊர்ல ஒரு குட்டி பையன் இருந்தான். அவன் பெயர் அர்ஜுன். அர்ஜுன் ரொம்ப நல்ல பையன், எல்லார்கிட்டேயும் ரொம்ப அன்பா இருப்பான். ஆனால் அவனுடைய ஒரு வழக்கம் அவன் பெற்றோருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. எதையும் நேரத்திற்கு செய்யாத அவனுடைய குணத்தை எப்படி மாற்றுவது என்றே அவர்களுக்கு தெரியவில்லை.
தினமும் காலையில் அவனை எழுப்பி, பள்ளிக்கு கிளப்புவதற்குள் அவனது அம்மாவிற்கு போதும்போதும் என்று ஆகிவிடும். படுக்கையில் இருந்து எந்திரிக்க, பல் துலக்க, குளிக்க என்று எல்லாவற்றிற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வான். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் தண்ணீரிலும், தட்டிலும் விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி பள்ளிக்கு ரெடி ஆவது? தினமும் ஸ்கூல் பஸ் வந்து, டிரைவர் ஹார்ன் அடித்துக்கொண்டே இருப்பார். அடித்துபிடித்து அர்ஜுனை பஸ்சில் ஏற்றிவிடுவாள் அவனது அம்மா.
இதுபற்றி ஒரு நாள் அவனது அப்பாவிடம் புலம்பிக்கொண்டிருந்த போது, நீ ஏன் இதைபற்றி அவனுடைய டீச்சரிடமே பேசக்கூடாது? அவர்கள் ஏதாவது யோசனை சொல்லக்கூடும் என்று அவர் சொல்ல, அது நல்ல யோசனையாக அவனது அம்மாவிற்கு தோன்றியது. மறுநாள் அர்ஜூனுடன் அவனது டீச்சரை சந்திக்க சென்று, அவரிடம் அர்ஜுனை பற்றிய கவலைகளை சொல்ல, டீச்சரோ, எனக்கும் அதே கவலை தாங்க, கிளாஸ்லயும் நோட்ஸ் முடிக்க மாட்டேங்கறான், எல்லாத்தயும் ரொம்ப ஸ்லொவா செய்யறான். எவ்வளவு சொன்னாலும் அவனுக்கு புரியவே மாட்டேங்குது என்று அவரும் குறைபட்டுக்கொண்டார்.
அப்போது டீச்சர், "எனக்கு ஒரு யோசனை தோணுது" என்றபடி அர்ஜுன் அம்மாவின் காதை கடித்தார். அதை கேட்டதும் அவன் அம்மாவின் முகம் மலர்ந்தது. இது கண்டிப்பா ஒர்கவுட் ஆகிறும்னு நினைக்கறேன் என்றபடி டீச்சருக்கு நன்றி சொல்லி வீட்டிற்கு கிளம்பி சென்றார்.
மறுநாள் அர்ஜுனுக்கு பீல்ட் ட்ரிப். அன்று மட்டும் எப்போதுமே அர்ஜுன் வேக வேகமாக கிளம்பி விடுவான். அன்று காலை அவனை அம்மா எழுப்பிய உடனே எழுந்து விட்டான், அம்மா சொல்வதற்கு முன்னமே பல் துலக்கி, குளித்து சீருடை அணிந்து சாப்பிட வந்தவன், அம்மா எதுவுமே இன்னும் தயார் செய்யாமல் இருப்பதை பார்த்து, "ஐயோ, என்னமா, இன்னும் ரெடி பண்ணலயா? பஸ் வந்துரும், சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பணுமே" என்று கவலையாக கேட்டான். "இதோ இருடா, டூ மினிட்ஸ்ல ரெடி பண்ணிடறேன், போன்ல வீடியோ பாத்துட்டு இருந்தேன், நேரம் போவதே தெரியலை" என்று சொல்லி ஆடி அசைந்து சமையற்காட்டிற்குள் நுழைந்தாள். அவன் சாப்பிட அமர்வதற்குள் பள்ளிப்பேருந்து வந்து ஹார்ன் அடிக்க, உணவை வேக வேகமாக விண்டு விழுங்கி, சாக்ஸ்'ஐ தேடினால் ஒன்று தான் கிடைத்தது, முந்தைய நாள் கழட்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக வீசியதை வீடு முழுவதும் தேடி கடைசியில் சோஃபாவிற்கு அடியில் அம்மாவும் மகனும் தேடிபிடித்து எடுப்பதற்குள் பஸ் கிளம்பி விட்டது.
அர்ஜுன் அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி அன்று மட்டும் ஸ்கூலில் ட்ராப் செய்ய பெர்மிஷன் வாங்கினான். காலனி, ஐடி கார்டு, ஸ்கூல் பேக் என ஒன்றொண்ரையும் தேடி எடுக்க என்று வேறு நேரம் விரயம் ஆனது. இதற்குள் அவனது அப்பாவும் காரின் சாவியை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை, என்று வீட்டையே தலைகீழாக புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தார். "எங்கேப்பா வச்சீங்க நேத்து?" என்று பொறுமை இழந்தவனாக அர்ஜுன் கேட்க.
தொடரும்...
No comments:
Post a Comment