"விஷ்ணு, எனக்கு தலை ரொம்ப வலிக்குது. நீ கொஞ்சம் எந்திரிச்சு வருணை பாத்துக்கறியா? ப்ளீஸ். ஏம்மா, என்னாச்சு? நைட் சரியா தூங்கலையா? ஆமாப்பா, வருண் நைட் முழுசும் இருமிக்கிட்டே இருந்தான், அவனை பாத்துக்கவே சரியா இருந்துச்சு. சரி, நீ ரெஸ்ட் எடு, நா எந்திரிச்சு பாத்துக்கறேன்" என்று சொன்ன அடுத்த நிமிடம் விஷ்ணு குறட்டை விட்டு தூக்கத்தை தொடர, அனு எப்போதும் போல கிச்சனுக்குள் நுழைந்து வேலையை தொடங்கினாள். குளித்து முடித்து, காலை, மதியம் இருவேளைக்கும் சமைத்து முடித்து, வீட்டை கிளீன் செய்து, மெஷினில் துணியை போட்டு, உலர்த்திக்கொண்டிருக்கையில் எழுந்து வந்த விஷ்ணு, "அனு தலை ரொம்ப வலிக்குது சூடா காபி கொடேன். இன்னைக்கு முழுசும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் நாளைக்கு ஆபீஸ்க்கு பிரெஷா போகமுடியும்னு நினைக்கறேன்" என்றான். கையில் இருந்த அம்ருதாஞ்சனை நெற்றியில் தேய்த்தவாறே பாலை அடுப்பில் வைத்து சூடு பண்ணலானாள் அனு.
Monday, September 23, 2019
Subscribe to:
Post Comments (Atom)
Learning Beyond Textbooks - Life Skills - Child Growth
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
இருள் போர்த்திய இரவு நேரம், ஜன்னலோர பயணம், வருடிய குளிர் காற்றில் நிலா மகள் இளைப்பாற சென்று விட்டாளோ!! பஞ்சு பொதி மேகக்கூட்டங்கள், மினுக் ...
-
Note : These are just from our experiences and an awareness post which might help many individual houses or apartments to use their water...
-
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
No comments:
Post a Comment