ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ என்று எண்ணியவாறே கடிகாரத்தை பார்த்த விஷ்ணு, அட எட்டு மணியாகிருச்சா என்றபடி பக்கத்திலிருந்த அனுவை மெதுவாக தட்டி எழுப்பினான். அனு நன்றாக அசந்து தூங்குவதை கண்டு சத்தம் போடாமல் கட்டிலை விட்டு இறங்கி, காலை வேளைக்கு என்ன டிபன் செய்யலாம் என்று யோசித்தபடியே ரூம் கதவை சாத்திவிட்டு சென்றான். சிறுது நேரத்தில் "என்னை ஏன் எழுப்பல" என்று கேட்டபடியே அனு வந்தாள். "நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த, சரி டிபன் ரெடி பண்ணிட்டு எழுப்பலாமேன்னு விட்டுட்டேன்" என்றபடி சட்னிக்குத்தேவையான தேங்காயை சில்லு எடுக்கலானான். "நைட் சரியா தூக்கமே வரல, அதான் அசந்து தூங்கிட்டேன், லேசா தலையை வேற வலிக்குது" என்றபடி நெற்றியை அழுத்தி விட்டுக்கொண்டாள் அனு. "இன்னைக்கு முழுசும் நீ ரெஸ்ட் எடு. லஞ்ச் வேலையும் நானே பாத்துக்கறேன்" என்றபடி அக்கறையாய் அவளை சோஃபாவில் கூட்டிப்போய் உட்காரவைத்துவிட்டு, சூடான ஒரு காஃபியை அவள் கையில் கொண்டுபோய் கொடுத்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Learning Beyond Textbooks - Life Skills - Child Growth
#Learning_Beyond_Textbooks #Life_Skills A home is the first environment where children can playfully learn a plenty. Traditional textbook le...
-
Note : These are just from our experiences and an awareness post which might help many individual houses or apartments to use their water...
-
வீட்டையே பள்ளிக்கூடமாக, அலுவலகமாக, விளையாட்டுத்திடலாக, உணவகமாக, உடற்பயிற்சிகூடமாக, திரையரங்கமாக மாற்றிய பெருமை நமக்கன்றோ!!! #கொரோனாக...
-
இருள் போர்த்திய இரவு நேரம், ஜன்னலோர பயணம், வருடிய குளிர் காற்றில் நிலா மகள் இளைப்பாற சென்று விட்டாளோ!! பஞ்சு பொதி மேகக்கூட்டங்கள், மினுக் ...
No comments:
Post a Comment