வீட்டிலேயே நாம் அனைவரும் முடங்கிக்கிடக்கும் இந்த நாட்களில் இணையதளம் மட்டுமே பெரும்பாலாக நமக்கு கைகொடுக்கிறது. நம் குடும்பத்தினருடனும், நட்பு வட்டத்துடனும் தொடர்பில் இருக்கவும், நம் தனிமையை போக்கவும் வாட்ஸாப்பும், ஃபேஸ்புக்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நம்முடைய Photos'ம் Videos'ம் நமக்குத் தெரிந்தவருடன் மட்டுமே ஷேர் செய்ய நினைத்து தான் அப்லோட் பண்ணுவோம். அதை வெளியாட்கள் பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்கிறேன். முதலில் Facebook Settings பற்றி பார்க்கலாம்.
1 . நாம் ஒரு பதிவை போடும் பொழுது, அதை Post செய்வதற்கு முன், அது Public என்று இல்லாமல் Friends என்று இருக்க வேண்டும். அதாவது, அந்த போஸ்ட்டை நம்முடைய Friends லிஸ்ட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும். Public என்று வைத்தால், அந்த போஸ்ட்டை யார் வேண்டுமென்றாலும், அவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தாலும் இல்லையென்றாலும், நம்முடைய Friend List'ல் இல்லாதவர்கள் கூட பார்க்க முடியும்.
2 . சில பதிவை நம்முடைய Friend List'ல் இருக்கும் ஒரு சிலர் மட்டும் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால், அதிலேயே "Friends Except " என்று இருக்கும். அதில் சென்று யாரெல்லாம் அந்த பதிவை பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களின் பெயர்களை அங்கே சேர்த்து விடலாம்.
3 . நமக்கு பரிச்சயம் இல்லாத நபர்களிடம் இருந்து நிறைய Friend Request வரும். நமக்கு தெரியாதவர்கள் என்றால் அந்த Request 'ஐ ஏற்காமல் இருக்கலாம், தவறில்லை. நம்முடைய Friend List'ல் யாரை சேர்க்கலாம் யாரை சேர்க்க வேண்டாம் என்று தீர்மானிக்கும் முழு உரிமை நமக்கு உள்ளது, அது தான் பாதுகாப்பும் கூட. நம்மை பற்றியும் நம் குடும்பத்தினர் பற்றியும் நாம் பகிரும் தகவல்களை யாரோ ஒருவர் எதற்க்காக பார்க்க வேண்டும்?
4 . சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக நமக்கு தெரியாத ஒருவரின் Friend Request 'ஐ நாம் ஏற்க வேண்டியதிருக்கும். அப்போது அவர்கள் நம்முடைய பதிவுகளை பார்க்க வேண்டாம் என்று எண்ணினால், அவர்களை Restricted List 'ல் வைக்கலாம். அப்படி வைத்தால் அவர்கள் நம்முடைய Friend List 'ல் இருப்பார்கள், ஆனால் நம்முடைய Public போஸ்ட்'ஐ மட்டும் தான் பார்க்க முடியும். இதை செய்வதற்கு அவர்களுடைய Friend Request Accept செய்த பின், அவர்களுடைய profile 'ல் (அதாவது அவர்களுடைய பக்கத்திற்கு சென்று) Message option பக்கத்தில் இருக்கும் ...'ஐ (மூன்று புள்ளிகள் இருக்கும்) கிளிக் செய்யவும். அப்படி செய்தால் வேறு சில options'ஓடு Block என்ற option'உம் வரும். அதை கிளிக் செய்தால் "Confirm Block" என்று ஒரு சிறிய box வரும். அதில் "take a break" என்று இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும். "Limit what PersonX will see" என்று இருப்பதை தேர்வு செய்தால் "Hide your post from PersonX" என்ற option'ஐ செலக்ட் செய்யவும். அவ்வளவு தான் இப்போது அந்த நபர் Restricted List'ற்கு போய் விடுவார். 5 . Facebook'ல் நிறைய Groups இருக்கும். நாம் அதில் சேர வேண்டும் என நினைத்தால், முடிந்தவரை "Public Groups"ல் சேராமல் இருக்கலாம். ஏனெனில் நாம் "Public Groups"'ல் பகிரும் தகவல்களை Group'ல் இல்லாதவர்கள் கூட பார்க்கலாம். அதே போல் "Public Groups"'ல் தேவை இல்லாமல் கமென்ட் செய்யாமல் இருப்பது நல்லது. அதுவும் நமக்கு safety கிடையாது.
இப்போது WhatsApp Status'ல் எப்படி பாதுகாப்பாக பகிரலாம் என்று பார்ப்போம். நம்முடைய கைபேசியில் நிறைய நம்பர்களை சேமித்து இருப்போம். Facebook'ஐ காட்டிலும் Whatsapp'ல் தான் Photos, Videos எல்லாம் instant upload செய்கிறோம். அதிலும் இப்போது Saree Challenge, Couple Challenge, Mommy Challenge என்று களைகட்டிக்கொண்டு இருக்கிறது. அதை நமக்கு நெருக்கமானவர்கள் மட்டும் பார்த்தால் போதும் என்று தானே நினைப்போம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தானே. மேலும் அது பாதுகாப்பும் இல்லையல்லவா?
அதை நமக்கு வேண்டியவரிடம் மட்டும் பகிர, Whatsapp Status Window'ல் இருக்கும் Vertical dots (நீளவாக்கில் இருக்கும் மூன்று புள்ளிகள்) கிளிக் செய்தால் Status Privacy என்ற Option வரும், அதை கிளிக் செய்து "Who can see my status update" என்பதில் இருக்கும் "My contacts except" என்ற option'ஐ தேர்ந்தெடுத்தால் அங்கே நாம் யாரெல்லாம் நம்முடைய status பார்க்க வேண்டாம் என நினைக்கிறோமோ அவரைகளை அதில் Add செய்து விடலாம்.
அதிலேயே "Only Share With" என்று ஒரு option இருக்கும், அதை தேர்வு செய்தால் நாம் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டும் ஒரு status'ஐ ஷேர் செய்ய வேண்டும் என நினைத்தால் அவர்களின் பெயர்களை அதில் add செய்து கொள்ளலாம்.
பிறகென்ன மகிழ்ச்சியாக status'ஐ நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் பகிர்ந்து கொள்ளலாம் தானே?
No comments:
Post a Comment